Pages

Wednesday, August 22, 2018

கடல் பயணங்கள்


கடல்

கடல் (இந்த ஒலிக்கோப்பு பற்றி ஒலிப்பு) அல்லது ஆழி(Sea), உலகப் பெருங்கடல் (World ocean), அல்லது வெறுமனே பெருங்கடல் (Ocean) என்பது புவியின் பரப்பில் 70 விழுக்காட்டை ஆக்கிரமித்துள்ள உப்பான நீர் கொண்ட இணைந்த (connected) நீர்நிலை ஆகும். இது புவியின் பருவநிலையை நிலைப்படுத்துவதோடு நீர் சுழற்சி, கரிமச் சுழற்சி, நைட்ரஜன் சுழற்சி ஆகியவற்றிலும் முதன்மைப் பங்காற்றுகிறது. பழங்காலங்களிலிருந்து கடலில் பயணங்கள் செய்யப்பட்டும் தேடல்கள் நடந்தும் வந்தாலும், அறிவியல் அடிப்படையிலான கடலியல் அல்லது பெருங்கடலியல் என்பது பெரும்பாலும் பசிபிக் பெருங்கடலை ஜேம்ஸ் குக் 1768க்கும் 1779க்கும் இடைப்பட்ட காலத்தில் கண்டறிந்து ஆராய்ந்ததிலிருந்துதான் தொடங்குகிறது. கடல் எனும் சொல்லானது பெருங்கடலின் சிறிய, பகுதியளவு நிலத்தால் சூழப்பட்ட பகுதிகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது."கடல்" என்ற சொல்லாவது, கடத்தற்கு அரியதென்று பொருள்படும். ஆழி, விரிநீர், பெருநீர், பருநீர், முதலானும் குறிக்கப்படுகிறது.


கடல் நீரில் மிக அதிகளவு கரைந்துள்ள திடப்பொருள் சோடியம் குளோரைடு (சாதாரண உப்பு) ஆகும். மேலும் இந்நீரில் மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற உப்புகளும் மேலும் பல தனிமங்களும் உள்ளன. இதில் சில குறைந்த செறிவுத்தன்மையுடன் காணப்படுகின்றன. உவர்ப்புத் தன்மை (salinity) இடத்திற்கேற்றார்போல் வெகுவாக வேறுபடுகிறது. கரைக்கு அருகிலும் கழிமுகப் பகுதியிலும் (ஆறும் கடலும் கலக்கும் இடம்) ஆழக்கடல் பகுதியிலும் உவர்ப்புத் தன்மை குறைவாகக் காணப்படுகிறது. எவ்வாறேனும், பெருங்கடல்களில் கரைந்திருக்கும் உப்புகளின் "ஒப்புமை" வீதங்கள் பொதுவாக ஒன்றாகவே இருக்கின்றன; பெரிதாக மாறுவதில்லை. கடல் பரப்பின் மீது வீசும் காற்றினால் அலைகள் உருவாகின்றன. இவை ஆழக்குறைவான நீரை அடையும்போது கொந்தளிப்புடன் உடைந்து சிதறுகின்றன. வீசும் காற்றின் உராய்வின் மூலமாக பரப்பு நீரோட்டங்கள் உருவாகின்றன. இது பெருங்கடல்கள் முழுவதும் மெதுவான ஆனால் நிலையான ஒரு நீரோட்டத்தை ஏற்படுத்துகிறது.

                                          


இந்த நீர்ச்சுழலின் திசைகள் கண்டங்களின் வடிவங்கள், புவியின் சுழற்சி (சுழலகற்சி விளைவு; Coriolis effect) போன்ற காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. உலகளாவிய இயங்கு பட்டை என்று அறியப்படும் ஆழ்கடல் நீரோட்டங்கள், அருகில் இருக்கும் துருவங்களில் இருந்து அனைத்து பெருங்கடல்களுக்கும் குளிர் நீரை எடுத்துச் செல்கின்றன. ஓதங்கள் தினமும் இருமுறை கடல்மட்டத்திலிருந்து உயர்ந்து தாழ்கின்றன. இந்த ஏற்ற இறக்கமானது புவியின் சுழற்சியினாலும் புவியைச் சுற்றும் நிலவின் ஈர்ப்பு விசையினாலும் மிகக்குறைந்த அளவு சூரியனாலும் ஏற்படுகின்றன. ஓதங்கள் விரிகுடாக்களிலோ கழிமுகங்களிலோ அதிக வீச்சுடன் இருக்கும். அழிவுத்தன்மை கொண்ட ஆழிப்பேரலைகள் கடலடி நிலநடுக்கங்களால் ஏற்படுகின்றன. இந்த நிலநடுக்கங்கள் கடலடியில் ஏற்படும் கண்டத்தட்டு நகர்வு, எரிமலை வெடிப்பு, பெரும் நிலச்சரிவு அல்லது பெரிய விண்வீழ்கற்களால் ஏற்படுகின்றன.
     


வைரசுகள், பாக்டீரியங்கள், புரோடிஸ்ட்கள், பாசிகள், தாவரங்கள், பூஞ்சைகள் இவற்றுடன் விலங்குகள் போன்ற பெரும் அளவிலான உயிரினங்கள் கடலில் வாழ்கின்றன. இந்த உயிரிகள் சூரியஒளி அதிகம் படும் பரப்பு நீர் முதல் சூரிய ஒளியே படாத அதிக அழுத்தத்திலும் குளிர்ச்சியிலும் இருட்டிலும் இருக்கும் அதிஆழ நீர் வரை பரவியுள்ளன. குறுக்குக் கோடு வாக்கில் (latitude) கடலின் தன்மையும் மாறுகிறது. எடுத்துக்காட்டாக, ஆர்க்டிக் பனிக்கு அடியில் குளிர் நீரையும் வெப்ப மண்டலப் பகுதிகளில் வண்ணமயமான பவளப் பாறைகளையும் கடல் கொண்டுள்ளது. முதன்மையான பல உயிரினக் குழுக்கள் கடலில்தான் சிறந்துவந்தன (evolved). மேலும், உயிரும் கடலிலேயே தோன்றியிருக்கக்கூடும்.

                                        
கடல் மக்களுக்குக் கணிசமான அளவு உணவுப் பொருட்களைத் தருகிறது. இதில் முதன்மையானதாக மீன், ஆளிகள், கடல்வாழ் பாலூட்டிகள், கடல்பாசி போன்றவை அடங்கும். கடல்பாசிகள் காட்டில் அறுவடை செய்யப்பட்டோ நீருக்கடியில் வளர்க்கப்பட்டோ கிடைக்கின்றன. வணிகம், பயணம், கனிமப் பிரித்தெடுப்பு, திறன் ஆக்கம் (power generation), போர், ஓய்வுநேரச் செயல்பாடுகளான நீச்சல், அலைச்சறுக்கு (surfing), பாய்மரப் பயணம் (sailing), கருவியுதவியுடன் குதித்தல் (scuba diving) போன்றவற்றுக்கும் கடல் பயன்படுகிறது. மாசுபாட்டினால் கடல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. வரலாறு முழுதும் கடல் பல பண்பாடுகளிலும் பெரிதும் உதவியுள்ளது. கடல் ஓமரின் ஒடிசி போன்ற இலக்கியங்களிலும் முதன்மையான கூறாக இருந்திருக்கிறது. இது கடல்சார் ஓவியத்திலும், அரங்கங்களிலும், பண்டைய இசையிலும் பெரும்பங்காக இருந்து வந்துள்ளது.




Saturday, August 18, 2018

மெரினா கடற்கரை

மெரினா கடற்கரை



மரீனா கடற்கரை [மெரீனா அல்லது மெரினா கடற்கரை] (Marina beach) உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும். இதன் நீளம் 13 கி. மீ. ஆகும். இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள மெரீனா, இந்திய மாநகரங்களில் ஒன்றான சென்னையின் கடல் எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிக நீளமான நகர்ப்புற கடற்கரை ஆகும். மும்பை நகரின் பாறைகள் நிறைந்த ஜுகு கடற்கரையைப் போன்று அல்லாமல் மெரீனா கடற்கரை மணற்பாங்காக உள்ளது. இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால் இது சென்னை நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. 2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களுக்குப் பிறகு இங்கு அனுமதியின்றிப் போராட்டங்கள் நடத்துவதற்கு சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது


போக்குவரத்து 




மெரினா கடற்கரையை  ஒட்டிய காமராஜர் சாலை ஆறுவழிப் பாதையாகும் கடற்கரையின் எதிர்புறம் கலங்கரை விளக்கம் ,திருவல்லிக்கேணி  சேப்பாக்கம் ஆகிய தொடர்வண்டி நிலையங்களும்,விவேகானந்தர் இல்லம், உள்ளன .அண்ணா சதுக்கத்தில் இருந்து சென்னையின் பல பகுதிகளுக்கு பேருந்து வசதியும் உள்ளன .

நிகழ்வுகள்:-

சென்னையின் முக்கிய பகுதியான இக்கடற்கரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் நடைபெறுகின்றன. இந்தியாவின் பெரிய ஓட்டமாகிய சென்னை மாரத்தானும் இங்கு நடைபெறும். ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்பர். பொங்கல் திருநாளில் மக்கள் தங்கள் உறவினர்களுடன் கூடி மகிழும் இடமும் இதுவே. சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாட்களில் அரசுத் துறைகளின் அணிவரிசை நடைபெறும்.


புகழ்பெற்றவர்கள்:-

ஈழத்திலிருந்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு கல்வி கற்க வந்த ஈழக் கவிஞர் தீபச்செல்வன் மெரீனா கடற்கரையிலுள்ள திருவள்ளுவர் ஆடவர் விடுதியில் வசித்துள்ளார்.

எழிழ்மிகு காட்சிகள் :-

உழைப்பாளர் சிலை :-


அண்ணாசிலை :-


திராவிட இயக்க அரசியலின் பிதாமகனாகப் போற்றப்படும் அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர், தமிழக முன்னாள் முதல்வர், கட்சி பேதமின்றி கொண்டாடப்படும் அரசியல் ஆசான் சி.என்.அண்ணாத்துரையின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

அண்ணா சமாதி 

தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சராக 20 நாட்களுக்கு பணியாற்றிய இந்திய அரசியல்வாதி ஆவார், அண்ணா ("மூத்த சகோதரன்") அல்லது அரிஞர் அண்ணா ("அன்னா, அறிஞர்") என பிரபலமாக அழைக்கப்படும் காஞ்சிவரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 - 3 பிப்ரவரி 1969) 1969 மற்றும் 1969 ஆம் ஆண்டுகளில், 1967 முதல் 1969 வரை, சென்னை மாகாணத்தின் பெயர் தமிழ்நாட்டிற்கு மாற்றப்பட்டது. திராவிட கட்சியின் பதவியை வகித்த முதல் உறுப்பினராக அவர் இருந்தார்.



எம்.ஜி.ஆர்  சமாதி :-
எம். ஜி. ராமச்சந்திரன் தலத்திற்கான-கோபாலன்-ராமச்சந்திரன்-17 ஜனவரி 1917 ம் ஆண்டு பிறந்தார்  அரசியல் கட்சி இந்திய தேர்தல் சின்னம் இரண்டு Leaves.png அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
விருதுகள் :-
பாரத் ரத்னா (1988)
கெளரவ டாக்டர் பட்டம் (1974)
எம்.ஜி.ஆர் என்று பிரபலமாக அறியப்பட்ட மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் (1917 ஜனவரி 17 - 1987 டிசம்பர் 24, 1987) ஒரு இந்திய நடிகர், திரைப்பட இயக்குனர் மற்றும் அரசியல்வாதி ஆவார். அவர் 1977 மற்றும் 1987 இடையே பத்து ஆண்டுகளாக தமிழக முதலமைச்சராக பணியாற்றினார். தமிழ்நாட்டின் மாநிலமான தமிழ்நாட்டின் மிகச் செல்வாக்குமிக்க நடிகர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். [1] அவர் மக்களுக்கு மிகவும் பிரபலமானவராக இருந்ததால் அவர் "மக்கல் திலகம்" (மக்கள் மன்னன்) என்று பிரபலமாக அறியப்பட்டார். அவர் ஒரு தொண்டு நிறுவனம் மற்றும் ஒரு மனிதாபிமான சின்னமாக இருந்தார். 24 டிசம்பர் 1987 (வயது 70) ம் ஆண்டு இறந்தார் .
ஜெயலலிதா சமாதி :-
24 பிப்ரவரி 1948 ஆம் ஆண்டு மைசூரில் பிறந்தார் இவரது இயற்பெயர் கோமணவல்லி ஆகும் அவவாறே அனைவராலும் அழைக்கபட்டர்.புகழ் பெற்ற தமிழ் நடிகை ஆகும் .
அரசியல் :-

அவர் மூன்றுமுறை(1991,2001,2011) மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்றார். அவர் அஇஅதிமுக அரசியல் கட்சி உறுப்பினராக ஈடுபட்டார்..அவர் அரசியலில் எம்.ஜி.ஆரின் கட்சி சார்புடையவராக இருந்தார்.


.


.
விருதுகள் :-
  • ‘பட்டிக்காடா பட்டணமா’ என்ற படம் இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான “பிலிம்பேர் விருதினை” வாங்கிக்கொடுத்தது.
  • சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை ‘ஸ்ரீ கிருஷ்ணா சத்யா’ என்ற படம் அவருக்கு வழங்கியது.
  • ‘சூர்யகாந்தி’ படம், இவருக்கு  சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வழங்கியது.
  • தமிழ்நாடு அரசு இவருக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கி கௌரவித்தது.
  • சென்னை பல்கலைக்கழகம் மூலமாக இலக்கியத்தில் ‘கவுரவ டாக்டர் பட்டம்’ பெற்றார்.
  • தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், அறிவியலுக்கான ‘கவுரவ டாக்டர் பட்டம்’ வழங்கியது.
  • ‘கடிதங்களுக்கான டாக்டர் பட்டத்தை’ மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இவருக்கு வழங்கியது.
  • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து அறிவியலுக்கான ‘கவுரவ டாக்டர் பட்டம்’ கிடைத்தது.
  • பாரதிதாசன் பல்கலைக்கழகம், ‘கடிதங்களுக்கான டாக்டர் பட்டத்தை’ வழங்கியது.
  • சட்டத்திற்கான ‘கவுரவ டாக்டர் பட்டத்தை’, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வழங்கியது.
இறப்பு:-

மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா டிசம்பர்- 06-2016 உடல்நிலை குறைவால் மரணம் அடைந்தார்.
சென்னை கலங்கரை விளக்கம் :-

சென்னை மெரினா  கடற்கரைக்கே ஓர் எழில்மிகு காட்சியாக அமைந்துள்ளது. இது பார்பதற்கு மிகவும் அழகிய வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி சமாதி :-
பிறப்பு:-
கருணாநிதி அவர்கள், திருக்குவளை என்ற சிறிய குக்கிராமத்தில், ஜூன் 3ஆம் தேதி, 1924ஆம் ஆண்டு, முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையார் தம்பதிகளின் மகனாக பிறந்தார்.
1967ல்  தமிழ்நாடு முதலமைச்சராக பணியாற்றிய  அண்ணாதுரை அவர்கள், திடீர் மரணம் அடைந்ததால், பதவிப் பொறுப்பை தொடர முடியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பின், அண்ணாதுரை வகித்த தலைமையமைச்சர்  பதவியை மு.கருணாநிதி அவர்கள் ஏற்றார். அதன் பின், அவர் 1971, 1989, 1996 மற்றும் 2006 ல் மீண்டும் தலைமையமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 87 வயதான மு.கருணாநிதி அவர்கள், திமுக கட்சியின் ஆணிவேராக மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு மாநில அரசியலிலும், ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார்.
விருதுகள்
  • அண்ணாமலை பல்கலைக்கழகம், இவரை கெளரவித்து ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது.
  • தமிழ் பல்கலைக்கழகம், அவரது படைப்பான “தென்பாண்டி சிங்கம்” என்ற புத்தகத்திற்கு ‘ராஜா ராஜன் விருதை’ வழங்கியது.
  • தமிழ்நாட்டு கவர்னரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேந்தரும் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவித்தனர்.
  • தலைவர் :-மு.கருணாநிதி உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி ஆகஸ்டு-07-2018.  ஆண்டு  இயற்கை எய்தினார்.

                            

சுனாமி :-

2004ஆம் ஆண்டு சென்னையில் சுனாமி ஏற்பட்டது அது சென்னை மாநகரையே புரட்டிபோட்டது ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் பல்வேறு குடும்பங்கள், மக்கள் ,கடைகள் என பல்வேறு இடங்கள் நாசமாகின.