Pages

கன்னியாகுமாரி

கன்னியாகுமாரி



பெயர்க்காரணம் :-


கன்னியாகுமாரி என்ற பெயர் இப்பகுதியில் புகழ் பெற்ற குமரி அம்மன் என்னும் இந்துசமயக் கடவுளை மையப்படுத்தும் தல புராணங்களிலிருந்து கிடைத்திருக்கிறது. இது பார்வதிதேவிதன்னுடைய ஒரு அவதாரத்தில் “குமரிபகவதி” என்னும் பெயருடன் சிவனை சேரும் பொருட்டு இந்நிலப்பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பாறையில் தவம் செய்து கொண்டிருக்கிறாள்.

கன்னியாகுமரி மாவட்டம் (Kanyakumari district) தமிழ் நாட்டின்முப்பத்திரண்டு மாவட்டங்களில் ஒன்று ஆகும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். மக்கள் தொகை அடர்த்தியில் தமிழகத்தில் இரண்டாம் இடம் (ச.கிமீக்கு 1111-பேர்) வகிக்கிறது. நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை என 4 நகரங்கள் உள்ளன.

தமிழின் ஐந்திணைகளில் நான்கு திணைகள் (முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்) ஒருங்கமைந்த மாவட்டம். இயற்கை அழகுக்குப்பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு சுவர்க்கமாக திகழ்கிறது.


இம்மாவட்டத்தின் மேற்கில் கேரள மாநிலமும், வடக்கிலும், கிழக்கிலும் திருநெல்வேலி மாவட்டமும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன.

 


இம்மாவட்டத்தின் மேற்கில் கேரள மாநிலமும், வடக்கிலும், கிழக்கிலும் திருநெல்வேலி மாவட்டமும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன.




கன்னியாகுமரியில்நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர்சிலை மற்றும் விவேகானந்தர்மண்டபம் :-


மருத்துவ வரலாறு :-

இம்மாவட்டம் பல அரிய மூலிகை வகைகளையும் தாது வளங்களையும் தாங்கும் மலைகளையும் கொண்டுள்ளது. கன்னியாகுமரிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் மருந்துவாழ் மலை அசோகர்காலகட்டத்தில் வாழ்ந்த புத்த பிக்குக்களால் மருத்துவ மற்றும் ஆன்மீக பாரம்பரியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இம்மலை இராமருக்கும் இராவணனுக்கும் இடையில் நடந்த காப்பியயுத்தத்தின் போது, அனுமன் சுமந்து சென்ற Gandha Madhana மலையின் உடைந்து விழுந்த பகுதியாக இதன் புராணாக் குறிப்பு கூறுகிறது. இம்மலையில் பல அரிய வகை மூலிகைகள் அதிக அளவில் உள்ளன.

பழங்கள்:-

     

                                          

நேந்திரம் பழம்,செந்துளுவன், ரசகதளி, பாளயம்கொட்டான், துளுவம், மட்டி, உட்பட பல வகையான வாழைப்பழங்கள் இங்கு பயிரிடப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல், பலாப்பழம் (வரிக்கில மற்றும் கூளன்), மாம்பழம் (அல்போன்சா, பங்களோரா, நீலம், மற்றும் ஒட்டு) தேங்காய் ஆகியன இம்மாவட்டத்தின் விவசாய வளத்துக்கு பெருமை சேர்க்கின்றன. இவை தவிர ரோஜா, செவ்வந்தி, உட்பட பல மலர்களும் இங்கே பயிரிடப்படுகின்றன.

கல்வி :-

கல்வியறிவு விகிதத்தில் (91.75 %) குமரி மாவட்டம் தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது. மேலும் கல்வித்தரத்திலும் முதலிடம் வகிக்கிறது.


மீன் பிடிப்பு :-

கன்னியாகுமரி கடல் பகுதிகளில் இருநூறுக்கும் மேற்பட்ட இன மீன்கள் கிடைக்கின்றன.



சுனாமி :-
2004 டிசம்பர் 26 அன்று தென் ஆசியாவையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கடற் பகுதிகளைக் கடுமையாகத் தாக்கிய சுனாமிப் பேரலை இம்மாவட்டத்தையும் பெரும் அழிவிற்கு உள்ளாக்கியது.



அதுமட்டுமின்றி 2017-இல்  ஓகி புயல் கன்னியாகுமாரி மாவட்டதையே புரட்டி போட்டது. இங்கு ஏற்பட்ட புயலால் மீனவர்கள் மிகவும் பாதிக்கபட்டனர். மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர் .


கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட புயலின் போது எடுக்கப்பட்ட காட்சி ஆகும் .புயலின் தாக்கம் மிக அதிவேகமாக  இருந்தது.