Pages

மாமல்லபுரம்

மாமல்லபுரம்



பெயர்க்காரணம் :-
மாமல்லபுரம் என்பதற்கு பெயர் காரணம், ஒருமுறை நரசிம்மராகிய மாமல்லர் தனது தந்தையுடன் உலா சென்றபோது ஒரு பாறையின் மீது யானையின் படம் வரைந்தார். அதை பார்த்த பிறகு, தான் அவர் தந்தைக்கு பாறைகளில் அழியா கோவில்கள் கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதனால் அவர் பெயரையே அந்த நகருக்கு இட்டார்.


மாமல்லபுரம்  இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்அமைந்துள்ள காஞ்சிபுரம்மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்டம்  திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கிய துறைமுகமாக விளங்கிய நகரமாகும். இந்நகரம் மகாபலிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.



சிற்பங்கள்:-

மாமல்லபுரத்தில் உள்ள கட்டடங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம் குடைவரைக் கோயில்கள் அல்லது மண்டபங்கள் ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது இரதங்கள் மற்றும் கட்டுமானக் கோயில்கள்.புடைப்புச் சிற்பத் தொகுதிகள் வெளிப்புறத்திலும் கோயில்களின் உட்புறத்திலும் காணப்படுகின்றன.


மாமல்லபுரத்தின் சிற்பங்கள் மிக நளினமாகவும் இயல்பானவையாகவும் இருப்பதாலும் கடற்கரைக் கோயில்கள், இரதங்கள், போன்ற சிறப்பு வாய்ந்த பல இருப்பதாலும், மாமல்லபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று 1984-ல் யுனெஸ்கோ அறிவித்தது. உலகப் பாரம்பரியக்களங்களில் ஒன்றான மாமல்லபுர தொல்லியல் களத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரித்து வருகிறது.


                                      
மாமல்லபுரத்தின் சின்னமாக விளங்கும் கடற்கரைக்கோயில்கள் இரண்டாம் நரசிம்மவர்மன் எனப்படும் ராஜசிம்மனால் கட்டப்பட்டவை. முதலில் இங்கு திருமால் தரையில் படுத்திருக்கும் கோலத்தில் ஒரு கோயில் இருந்திருக்கிறது. அதற்கு இரு பக்கத்திலும் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியுமாக இரு சிவன் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. 
                                     Image result for mamallapuram sirpangal

கடற்கரைக் கோயில்கள் :-
                                             

கிழக்கு நோக்கிய கோயில் உயரமானதாக ஐந்து அடுக்குகள் கொண்ட கோபுரத்தை உடையதாக உள்ளது. மேற்கு நோக்கிய கோயில் சிறியதாக, மூன்று அடுக்குகள் கொண்ட கோபுரத்தைக் கொண்டதாக உள்ளது. இரண்டு கோயில்களின் கருவறையின் பின்புறச் சுவரிலும் சோமாஸ்கந்தர் எனப்படும் சிவன், உமை, குழந்தை வடிவிலான குமரன் என்ற மூன்று தெய்வங்களும் சேர்ந்திருக்கும் சிற்பம் காணப்படுகிறது. இக்கோயிலில் உள்சுற்று ஒன்றும் காணப்படுகிறது. சுவரின் பல இடங்களிலும் பல்வேறு தெய்வச் சிற்பங்களும் புராண பாத்திரங்களும் காணக் கிடைக்கின்றனர்.
                                   
மாமல்லபுரம் என்று அழைக்கப்படும் மகாபலிபுரத்தில் சிறப்புகளும் சிற்பங்களும் நிறையவே காணப்படுகின்றன இது வரலாற்று சிறப்பு மிக்க கோவில் ஆகும் .
 மாமல்லபுரக் கோயில்கள் நான்கு வகைப்பட்டவை. 
             1. மாமல்லபுரக் கோவில்கள்
             2.குகைக்கோவில்கள்
             3.மாமல்புரக் கடற்கரைக்கோவில்
             4.கங்கை மரபுவழி சின்னகள்
கலங்கரை விளக்கம் :-
மாமல்லபுரம் என்று சொல்லப்படும் மகாபலிபுரதில் கலங்கரை விளக்கம் மிகஅழகிய வடிவில் காட்சிப்படுத்தபட்டிருக்கும்.