போர்ட் பிளேர்
போர்ட் பிளேர் இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒன்றியப் பகுதியின் தலைநகரமாகும். போர்ட் பிளேயரில் இயற்கையாக அமைந்த பெரிய துறைமுகம் உள்ளது. மேலும் போர்ட் பிளேயரில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.
அரசு நிர்வாகம்
போர்ட் பிளேர் நகரை தலைமையிடமாகக் கொண்டுள்ள, இந்திய அரசின் முகவரான ஒரு ஆணையாளர் ஒட்டுமொத்த அந்தமான் நிக்கோபார் தீவுகளின் அரசு நிர்வாகத்தை கண்காணிக்கிறார்.
போக்குவரத்து வசதிகள்
போர்ட் பிளேரிலிருந்து சென்னை, கொல்கத்தா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களுக்குச் செல்ல கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து வசதி உள்ளது. சென்னையிலிருந்து போர் பிளெயருக்கு இடையே 2148 கி.மீ., தூரம் உள்ளது.
நிலவியல் மற்றும் தட்பவெப்பநிலை
வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள போர்ட் பிளேர் நகரம் வெப்பமண்டல மழைக்காடுகள் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் குறைந்த வெப்பமும் மற்றும் சனவரி, பிப்பிரவரி மற்றும் மார்சு மாதம் குறைவான மழையும் பிற மாதங்களில் பரவலான மழை இருக்கும்.
கைவினைப் பொருட்கள் விறபனையகம்
வினாயக் தாமோதர் சாவர்க்கர்சர்வதேச விமான நிலையம்
சட்தம் தீவு, போர்ட் பிளேர்
சிடியா தாபு, போர்ட் பிளேர்
அபர்தீன் அங்காடிகள்
சிற்றறைச் சிறையின்நுழைவாயில்
ராஜிவ் காந்தி நீர் விளையாட்டுகள் நிலையம், போர்ட் பிளேர்
No comments:
Post a Comment