Pages

தனுஷ்கோடி




 தனுஷ்கோடி








தனுஷ்கோடி (Dhanushkodi) தமிழ் நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவின் தென் கோடியில் உள்ள ஊர். இது பாம்பனுக்கு தென் கிழக்கே இராமேஸ்வரத்திலிருந்து 25 கி. மீ., தொலைவில் உள்ளது. இலங்கையுடன் கடல்வாணிபம் புரிய தனுஷ்கோடி சிறந்த துறைமுகமாக விளங்கியது.

இங்கு வங்கக் கடலும், இந்தியப் பெருங்கடலும் கூடுமிடம் புகழ் பெற்றது. இங்கு குளித்தால்தான் காசி யாத்திரை முடிவுறுவதாக இந்துக்கள் நம்புகின்றனர். இங்குள்ள கோதண்டராமர் கோயில் ராமேஸ்வரத்திலிருந்து 12 கி. மீ., தொலைவில் உள்ளது.
தனுஷ்கோடி


தனுஷ்கோடி புயல், 1964

1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை வீசிய கடும் புயலில் அடித்து செல்லப்பட்டது. இதன்போது சென்னையில் இருந்து இராமேஸ்வரம் சென்று கொண்டிருந்த தொடருந்து அடித்துச் செல்லப்பட்டதில் அதில் பயணித்த 123 பேரும் கொல்லப்பட்டனர்.[4] அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் மொத்தம் 2000 பேர் வரை உயிரிழந்தனர். அதன் பின்னர் தமிழ் நாடு அரசு இந்த ஊரை வாழத் தகுதியற்றதாக அறிவித்தது. தற்போது புதிய தனுஷ்கோடி உருவாக்கப்படுகிறது
.
                                         

தனுஷ்கோடியில் அழிந்த நிலையில் உள்ள ஒரு தேவாலயம்



புயல் வந்து புரட்டிப் போட்டதன் அடையாளமாக இன்றும் மிச்சமிருப்பது சிதிலமடைந்த ஒரு தேவாலயமும், சில கட்டடங்களும் மட்டுமே. இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்கள், தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பி வாழ்ந்து வருகின்றனர். மீன் சுட்டுத் தருவது, சிப்பி, முத்துக்களால் ஆன மணி மாலைகளால் உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். தனுஷ்கோடியின் ரயில் நிலையத்தை கடல் கொண்டது. ரயில் தண்டவாளம், பாதி கடலுக்குள் சென்றபடி காட்சி அளிக்கிறது.

தனுஷ்கோடியின் சிறப்பு அம்சங்கள்

நீல கடல் காட்சி
கடற்கரையில் பைக் சவாரி


  • கடல் கரையில் விளையாடி குளிக்கலாம்
  • கடற்கரையில் அமைதியான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் நடை மீதமுள்ளவர்களின் பார்வை
  • கடலை இணைத்தல் 
  • குளிர்காலத்தில் (அக்டோபர், நவம்பர்) பருவங்கள் கடற்புலிகள், பறவைகள் மற்றும் பிற நாடுகளிலிருந்து வரும் பறவைகள் தனுஷ்கோடி (கோதண்ட ராமரின் கோவிலுக்கு அருகிலுள்ள அரண்மனையில்) வருகின்றன.

புயலால் சிதலமடைந்த சிவன் மற்றும் நந்தி சிலைகள்






சிதைந்த தனுஷ்கோடி அருகே உள்ள அரிச்சல் முனை கடற்கரை.



தனுஷ்கோடி பேருந்து சாலை முடிவடையும் இடத்தில் உள்ள சிதலமடைந்த மீன்பிடி படகு. தனுஷ்கோடி



தனுஷ்கோடி மீன் உணவகம் 


No comments: