Pages

திருச்செந்தூர்

திருச்செந்தூர்


திருச்செந்தூர்  இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.



திருச்செந்தூரில்  முருகனின் அறுபடை   வீடுகளில்  இரண்டாம் படை  என்று  போற்றப்படும்  சுப்பிரமணிய    சுவாமி     கோயில் அமைந்துள்ளது.   சூரபத்மனைப்      போரில்   வென்ற     செந்தில்     நின்று    சிரிக்கும்  கோயில்   இதுதான்.  ஐப்பசி  மாதம்  நடக்கும் சூரசம்காரம்      திருவிழா       பிரபலமானது.    இது      மட்டுமின்றி ஆவணித்திருவிழா  மற்றும் மாசித்திருவிழா ஆகியவை இங்கு புகழ்பெற்றவை      ஆகும்.   நாழிக்கிணறு என்ற    தீர்த்தம் இங்கு உள்ளது. கடலுக்கு மிக அருகில் உள்ள இந்த நீரூற்றில் தண்ணீர் சுவையாக இருக்கின்றது.

திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
                                         

கடலில் ஆர்வமாக குளிப்பார்கள். தற்போது கடல் உள்வாங்கியிருப்பதால் யாரும் கடலில் குளிக்ககவில்லை.


திருச்செந்தூர்  ஸ்ரீ  சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலை ஒட்டிய கடற்கரை பகுதியில்  கடல்நீர் உள்வாங்கியது. அப்போது  நீரில் மூழ்கியிருந்த பகுதிகள் வெளியே தெரிந்தன.அப்போது பக்தர்கள் கடற்பகுதியை ஆர்வமுடன்   பார்வை இட்டனர் 

                                       

திருச்செந்தூர் கடல் புவியியல் செயல்பாட்டின் காரணமாக சில நேரங்களில் இதுபோன்று உள்வாங்குவது குறிப்பிடத்தக்கது. சாதாரணமான நேரங்களில் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர்

ராஜகோபுரம்:-



திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.





No comments: