வேளாங்கண்ணி
வேளாங்கண்ணி (Velankanni), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். முற்காலத்தில் இவ்வூரில் அமைந்திருந்த குளத்தைச் சுற்றி வேளாண்மை நடந்து வந்தது. ஆகவே, 'விவசாய நிலம்' என்று பொருள்படும் 'வேளாண் காணி' என்ற சொல்லில் இருந்து, வேளாங்கண்ணி என்ற பெயர் உருவானதாக கூறப்படுகிறது
தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி
வேளாங்கண்ணி தமிழகத்திலும் இந்திய நாட்டிலும் தலைசிறந்த கத்தோலிக்க திருத்தலமாக விளங்குகிறது. அன்னை மரியா காட்சி கொடுத்த இடத்தில் கட்டப்பட்டுள்ள தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம் பக்தர்களை வெகுவாக கவர்ந்திழுக்கிறது. எல்லாச் சமயங்களைச் சேர்ந்த திருப்பயணிகளும் அங்குச் சென்று, அன்னை மரியாவுக்குப் பொருத்தனைகள் செலுத்தி, காணிக்கைகள் அளித்து, செபங்கள் ஒப்புக்கொடுக்கிறார்கள். நம்பிக்கையோடு இறைவேண்டல் செய்வோர் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறுவது கண்டு நன்றிக் காணிக்கைகளும் வழங்குகிறார்கள்.வேளாங்கண்ணி அன்னை திருத்தலம்
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,144 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். வேளாங்கண்ணி மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வேளாங்கண்ணி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்
No comments:
Post a Comment